திடீரென 80 அடிக்கு உள்வாங்கிய கடல்.. ஆபத்தை உணராமல் மக்கள் குதூகலம்

x

திருச்செந்தூர் முருகன் கோவில் முன்புள்ள கடல் 80 அடி உள்வாங்கி காணப்படுகிறது... செல்வதீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு 80 அடி கடல் உள்வாங்கிய நிலையில் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவு வெளியே தெரிகின்றன. இருப்பினும் பக்தர்கள் ஆபத்தை உணராமல் அதன் மேல் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து, பாறையில் நின்று விளையாடி கடலில் நீராடியும் வருகின்றனர். இதனால் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பாக நீராடுமாறு பொதுமக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்