சுட்டெரித்த வெயில்; சுருண்டு விழுந்து- தூய்மை பணியாளர் துடிதுடித்துபலி
மதுரையில் கடும் வெயிலால், தூய்மை பணியாளர் மயங்கி விழுந்த உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி 5ஆவது வார்டு பகுதிகளில் குப்பைகள் சேகரித்து கொண்டிருந்த போது, மணிவேல் என்ற தூய்மை பணியாளர் மயங்கி கீழே விழுந்தார். அப்போது, அங்கிருந்த கற்கள் மீது விழுந்ததால் பின்புற தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பணி நேரத்தை குறைக்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
