பள்ளி சிறுமிக்கு பல நாட்களாக நடந்த கொடுமை - போதையில் இளைஞர் செய்த காரியம்..

x

Nilgiris POCSO Act | பேருந்தில் சென்ற பள்ளி சிறுமிக்கு பல நாட்களாக நடந்த கொடுமை - போதையில் இளைஞர் செய்த காரியம்.. நீலகிரியில் அதிர்ச்சி

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூவரசன் என்ற இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி பயணம் செய்யும் பேருந்தில் நாள்தோறும் சென்று வரும் பூவரசன், தொடர்ச்சியாக மாணவியை உரசி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவரை தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளார். இந்நிலையில் மதுபோதையில் வந்த பூவரசன் மாணவியை கிண்டல் செய்ததுடன், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான புகாரில் போக்சோவில் வழக்குபதிவு செய்த போலீசார் பூவரசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்