மஹா பிரதோஷத்தில் தி.மலை பெரிய நந்தி கொடுத்த காட்சி - மனமுருகி நின்ற பக்தர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயிலில், சனி மஹா பிரதோஷ தினத்தையொட்டி பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனைகள் நடத்தப்பட்டது. அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றை கொண்டு, பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, நந்தி பகவான் அருள் பெற்றுச் சென்றனர்.
Next Story
