சேலத்தை அதிர வைத்த மோசடி - மாஸ்டர் மைண்ட்-ஐ ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

x

சேலத்தில் வைரக்கல்லை விற்பனை செய்து தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வசிக்கும் பிரபு என்பவர், தனக்கு சொந்தமான 20 லட்சம் மதிப்புள்ள வைரக்கல்லை விற்பனை செய்து தருவதற்காக விருதுநகரை சேர்ந்த மணிமாறன் என்பவர் ஒப்பந்தம் செய்துள்ளார். ஒப்பந்தபடி வைரக்கல்லை வாங்கி கொண்ட அந்த நபர் வைரத்தை விற்ற பிறகு பணத்தை உரிமையாளரிடம் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக வைரத்தின் உரிமையாளர் பிரபு சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாராணை மேற்கொண்டு மோசடி செய்த மணிமாறனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்