குழந்தைக்கு கொடுத்த ரோஸ்மில்க்கில் துர்நாற்றம் - உள்ளே இறங்கி விளாசிய அதிகாரிகள்

x

சிவகங்கையில் குழந்தைக்கு கொடுத்த ரோஸ்மில்க்கில் துர்நாற்றம் வீசியதால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடையில்

சோதனை செய்தனர். அகிலாண்டபுரம் பகுதியை சேர்ந்த பிரியா

என்பவர் தனது 3 வயது குழந்தைக்கு வாங்கி சென்ற ரோஸ்மில்க்கில் துர்நாற்றம் வீசியதால் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

புகாரின் பேரில் வந்த உணவு பாதுக்காப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் இருந்த மற்ற ரோஸ்மில்க் பாக்கெட்டுக்களை சோதனை செய்ததோடு, துர்நாற்றம் வீசிய ரோஸ்மில்க்கை ரசாயன பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்