மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்... காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்

மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்... காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்

மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்... காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்

கடலூர் முதுநகரில் லாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் மீன் வாங்கியதால், கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நோய் தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. அதேபோல், ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ள நிலையில், இறைச்சி வாங்குவதற்காக பொதுமக்கள் முதுநகரில் குவிந்தனர். அப்போது, கேரளாவில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட மீன் லாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு இறைச்சி வாங்கினர். மேலும், முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்ததாலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com