சிறையில் இருந்து வந்த அன்றே ஓசி பிரியாணிக்கு அடி போட்டு களி திங்க சென்ற சிறை பறவை.. சிரித்து கொண்டே வழியனுப்பிய நண்பன்

x

சிறையில் இருந்து வெளியே வந்த உடனேயே கத்தியை காட்டி மிரட்டி ஓசி பிரியாணி வாங்கி சென்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். சென்னை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் நான்காவது குறுக்குத் தெருவை சேர்ந்த மஸ்தான் என்பவர், அதே பகுதியில் பியாணி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடப்பேரி பகுதியைச் சேர்ந்த ரவுடி மதன், மற்றும் சச்சின் ஆகிய இருவரும், மஸ்தான் கடைக்கு சென்று மூன்று பிரியாணி மற்றும் சிக்கன் பக்கோடா பார்சல் வாங்கி உள்ளனர். அப்போது, பணம் கேட்டதற்கு கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டியதோடு கல்லா பெட்டியில் இருந்து 700 ரூபாய் பணத்தையும் திருடி சென்றுள்ளனர். இது குறித்து மஸ்தான் அளித்த புகாரில் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், மதன் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் மதுவிற்காகவும், உணவிற்காகவும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்