Price Hike | கலங்கடிக்க வைக்கும் பூக்கள் விலை.. ஒரு கிலோ மல்லி இவ்வளவா?
Price Hike | கலங்கடிக்க வைக்கும் பூக்கள் விலை.. ஒரு கிலோ மல்லி இவ்வளவா? #Jasmineflower #pricehike #thanthitv கடும் பனிப்பொழிவு மற்றும் ஐயப்ப பக்தர்கள் விரதம், திருக்கார்த்திகை திருநாள் எதிரொலியாக நெல்லையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பனிப்பொழிவால் பூக்களின் வரத்து குறைந்துள்ள நிலையில், தேவை அதிகரித்ததால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நெல்லை சந்திப்பு மலர் சந்தையில், ஒரு கிலோ மல்லிகைப்பூ 2,500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கேந்திப்பூ கிலோ 80 ரூபாய்க்கும், சம்பங்கிப்பூ 200 ரூபாய்க்கும், ரோஜாப்பூ 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளை செவ்வந்தி மற்றும் அரளிப்பூ தலா 300 ரூபாய்க்கும், நந்தியாவட்டை 350 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து முகூர்த்த நாட்கள் மற்றும் திருவிழாக்கள் வரவுள்ளதால், பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
