Police Attack Viral Video | பவரை மிஸ்யூஸ் செய்த போலீஸ் - கடைசியில 3ம் கண் வச்ச முரட்டு ஆப்பு

கடைசியில 3ம் கண் வச்ச முரட்டு ஆப்பு

#fastfoodshop #policeattack பாஸ்ட்புட் கடை ஊழியரை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பாஸ்ட்புட் கடையை மூடக்கோரி பொருட்களை சேதப்படுத்தி, ஊழியரை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் மோகன்குமார், ரோந்து பணியின் போது திறந்திருந்த பாஸ்ட்புட் கடையை மூடக் கூறி, அங்கிருந்த பொருட்களை லத்தியால் தள்ளி, வடமாநில ஊழியரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, காவலரை முதலில் ஆயுதப்படைக்கு மாற்றிய நிலையில், தற்போது பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com