வீர வசனம் பேசி இன்ஸ்டாவில் வீடியோ விட்ட இளைஞர் - நைசாக ஸ்டேஷன் வரவழைத்த போலீஸ்

x

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், திரைப்பட வசனம் பேசி இன்ஸ்டாகிராமில் சவால் விடுத்த இளைஞரை போலீசார் எச்சரித்தனர்.

கோவில்பட்டி மூப்பன்பட்டியை சேர்ந்த முகில் ராஜ் என்பவர் மீது கொலை உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கொலை வழக்கு உள்ளிட்ட 8 வழக்குகளில் தொடர்புடைய இளஞ்சிறார் ஒருவருக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் திரைப்பட பாணியில் முகில்ராஜ் வசனம் பேசி வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்து, காவல்நிலையத்திற்கு முகில்ராஜை வரவழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்