Viral Video| `கிரைம் நடப்பதற்கு’ முன்பே வந்த போலீஸ் - பார்த்ததும் கண்முன் வந்த மரணபீதி

கிரைம் நடப்பதற்கு’ முன்பே வந்த போலீஸ் - பார்த்ததும் கண்முன் வந்த மரணபீதி

#biketheft #biketheftviral

தாம்பரம் அருகே இருசக்கர வாகனங்களின் பூட்டை காலால் உதைத்து உடைத்து திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலையூர் மப்பேடு புத்தூர் சாலை பகுதியில், வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். ஒரு நபர் இரு சக்கர வாகனத்தின் பூட்டை உடைக்க முயன்று முடியாததால், அருகில் இருந்த வாகனத்தை திருடிச் சென்றார். தொடர்ந்து வந்த மற்றொரு இளைஞர் அதே பகுதியில் இருந்து மற்றொரு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றார். அப்போது போலீஸ் வருவதை கண்ட திருடர்கள், திருடிய வாகனங்களை சாலையிலேயே விட்டுவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com