Erode | Collector | TN Police | DPல் இருந்த படம்.. கலெக்டர் பெயரில் Crime.. ஷாக்கில் ஈரோடு

DPல் இருந்த படம்.. கலெக்டர் பெயரில் Crime.. ஷாக்கில் ஈரோடு

Erode | Collector | TN Police | DPல் இருந்த படம்.. கலெக்டர் பெயரில் Crime.. ஷாக்கில் ஈரோடு #Erode #Collector #TNPolice ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் டிபியாக வைத்து, அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகக் கூறி, வடமாநிலக் கும்பல் ஒன்று 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அனுப்புவது போல், பல அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதனை உண்மை என நம்பிய சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர், குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு இரண்டு தவணைகளாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார். பின்னர் அந்த எண்ணைத் தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த அவர், ஆட்சியர் கந்தசாமியிடம் இது குறித்துத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட செல்போன் எண் மற்றும் வங்கிக் கணக்கை ஈரோடு சைபர் கிரைம் போலீசார் முடக்கி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தனது பெயரில் பணம் கேட்டு வரும் போலித் தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X