"ஏழைகளுக்காக பொங்கல் தொகுப்பை அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா"
"ஏழைகளுக்காக பொங்கல் தொகுப்பை அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா"
இந்தியாவிலேயே பொங்கல் பரிசு தொகுப்பு எனும் மகத்தான திட்டத்தை தொடங்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கூறியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தரவுள்ளார். இதையொட்டி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பை அறிமுகப்படுத்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக் கூறினார். இந்த திட்டத்தால் ஏராளமான ஏழை மக்கள் பயன்பெறுவதாகவும் அவர் கூறினார்.
