கேவலத்தின் உச்சம்.. விஏஓ ஆபிஸுக்குள் பிஏ செய்த அநாகரிக செயல்.. தீயாய் பரவும் வீடியோ

சேலம் ஓமலூர் அருகே கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் வைத்து விஏஓ-வின் உதவியாளர் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது. ஓமலூர் அருகேயுள்ள பொட்டியபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம், இவர் தகாத முறையில் பேசி, அநாகரிகமாக நடந்து கொள்வதாக கூறப்படும் நிலையில், கடந்த ஜனவரி 25 ஆம் தேதி அலுவலகத்தில் வைத்தே மது அருந்தியதாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வரும் நிலையில், இது குறித்து

காடையாம்பட்டி வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஓமலூர் போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com