சுழற்றி எடுத்த சூறைக்காற்று - பஸ்ஸுக்கு நேர்ந்ததை கண்டு வெளியே ஓடி வந்த பயணிகள்

x

சுழற்றி எடுத்த சூறைக்காற்று - பஸ்ஸுக்கு நேர்ந்ததை கண்டு வெளியே ஓடி வந்த பயணிகள்

வேடசந்தூர் அருகே சூறைக்காற்றுக்கு அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து பறந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் வடமதுரை அருகே உள்ள குருந்தம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு மாநகரப் பேருந்து, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது தீடிரென வீசிய காற்றில் பலத்த சத்தத்துடன் பேருந்தின் மேற்கூறை பெயர்ந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். உடனடியாக ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.இந்த நிலையில் முறையான பராமரிப்பு இன்றி அரசு பேருந்து இயக்கப்பட்டதாக் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்