தண்ணீர் விற்பவரிடம் வேலையை காட்டிய அதிகாரி..பதுங்கி நின்று பாய்ந்த ஆபத்து..
காஞ்சிபுரம் மாநகராட்சியில் லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சரவணன் என்பவர் குடிநீர் வியாபாரம் செய்வதற்கான தடையில்லா சான்று பெற சுகாதார ஆய்வாளர் பிரகாஷை அணுகியபோது, அவர் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன், காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் லஞ்ச பணத்தை வாங்கிய போது , சுகாதார ஆய்வாளர் பிரகாஷை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
Next Story
