சிசுவின் விரலை நர்ஸ் வெட்டிய விவகாரம்..'' தந்தை கதறல் பேட்டி

x

வேலூர் அரசு மருத்துவமனையில் கத்தரிக்கோலால் விரல் துண்டிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைப்பெற்றது. எனினும் குழந்தையின் விரலை சேர்க்க முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்ததால் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். வேலூர் முள்ளிபாளையத்தை சேர்ந்த விமல்ராஜ்–நிவேதா தம்பதியினருக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், குழந்தையின் கையில் குளுக்கோஸ் ஏற்றியிருந்த ஊசியை செவிலியர்கள் மாற்றுவதற்காக, வலது கையில் ஒட்டப்பட்டிருந்த டேப்பை கத்தரிக்கோலால் வெட்டும்போது குழந்தையின் வலது கை கட்டை விரல் துண்டானது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக குழந்தையை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் குழந்தையின் விரலை கையோடு சேர்க்க முடியாதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்