சிறையிலேயே ஏர்போர்ட் மூர்த்திக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி

x

நில ஆக்கிரமிப்பு வழக்கில் புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், முகாந்திரம் இல்லாததால் நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஏர்போர்ட் மூர்த்தி ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள கடையை ஆக்கிரமிப்பு செய்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். ஆனால் விசாரணையில் அவருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் இல்லாததால், நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்க இயலாது என நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்