சென்னைக்கு அடுத்த டேஞ்சர்.. ஆபத்தின் பிடியில் கொசஸ்தலை - எண்ணையில் மிதக்கும் எண்ணூர்..

x

மிக்ஜாம் புயலின்போது, சென்னை எண்ணூரில் உள்ள சிபிசிஎல் தொழிற்சாலையில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலில் கலந்ததால், பெரும் துயரத்திற்கு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 100 படகுகள் மற்றும் 400 பணியாளர்கள் என, மீனவர்கள் உதவியுடன் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எண்ணெய் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 40 டன் எண்ணெய் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அகற்றப்படும் எண்ணெய் கழிவுகளை, கும்மிடிப்பூண்டியில் உள்ள பிரத்யேக தொழிற்சாலையில் பாதுகாப்பாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் படலம் பரவாமல் இருக்க, இதுவரை 625 மீட்டர் நீளத்துக்கு எண்ணெய் மிதவை பூம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 2 ஸ்கிம்மர் உறிஞ்சும் கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்