மருத்துவ மாணவி மரணம் விபரீத முடிவின் பகீர் பின்னணி..!
மருத்துவக்கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை...
இளங்கலையில் கோல்ட் மெடல்... முதுகலையில் விபரீத முடிவு...
2 ஆண்டுகளாக வசித்த வாடகை வீட்டில் நடந்த பயங்கரம்...
காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய போதும் மாணவி மர்ம மரணம்...
காதல் விவகாரமா? மருத்துவமனையில் பணிச்சுமை காரணமா?
கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வெள்ளை உடையில் மருத்துவராக பார்க்க வேண்டிய மகளை, வெள்ளை துணிசுற்றி பிணமாக பார்த்தால் எந்த பெற்றோரால் தாங்கி கொள்ள முடியும்.
காதல் விவகாரம்... பணிச்சுமை... என பகீர் கிளப்பும் இந்த சம்பவத்தின் பின்னணியை தெரிந்து கொள்ள செய்தியாளர் சாலமனுடன் களத்தில் இறங்கினோம்.
திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் ரவி. இவரது மகள் திவ்யா. 26 வயதான இவர் வேலூர் மருத்துவக்கல்லூரியில் MBBS படித்துவிட்டு, தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
வீட்டில் இருந்து வந்து செல்வது கடினம் என்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக TP சத்திரம் தர்மராஜன் கோவில் தெரு பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி படித்து வந்திருக்கிறார்.
தினந்தோறும் நண்பர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் திவ்யாவை கல்லூரிக்கு அழைத்து சென்று பின் மாலை வீட்டில் விடுவது வழக்கம்.
அப்படித்தான் சம்பவத்தன்று காலை திவ்யாவை கல்லூரிக்கு அழைத்துச் செல்வதற்காக நண்பர்கள் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. பலமுறை கால் செய்தும் போன் எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் மூவரும் கதவை உடைத்து கொண்டு, உள்ளே சென்று பார்த்த போது தான் அவர்களுக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.
உள்ளே ஜன்னல் கம்பியில் துணி காயவைக்கும் கயிற்றால் திவ்யா தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்திருக்கிறார். உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின் பேரில், டிபி சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இறந்து கிடந்த திவ்யாவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.
திவ்யாவின் இந்த விபரீத முடிவுக்கு காரணம் என்ன என்று போலீசார் நடத்திய விசாரணையில் தான் பல திடுக்கிடும் காரணங்கள் வந்து விழுந்தன.
திவ்யாவும் அவருடன் படித்து வந்த ஒரு மாணவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆரம்பத்தில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், போக போக பச்சை கொடி காட்டியதாக சொல்லப்படுகிறது. இருவரும் மருத்துவ படிப்பை முடித்த பின்பு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து திவ்யாவின் காதலன் தான் தினந்தோறும் அவரை வீட்டிலிருந்து காலேஜுக்கு பிக்-அப் செய்து மீண்டும் ட்ராப் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். சில நாட்கள் இருவரும் ஒன்றாக தங்குவதாகவும் அப்பகுதி வாசிகள் கூறுகின்றனர்.
பைட்......shop onwer lady byte - புனிதா - பகுதிவாசி (நடுவில் ஒரு 15 வினாடிகள் லேக் இருக்கும் அதை ட்ரிம் செய்து கொள்ளவும்)
இந்த நிலையில் தான் சம்பவத்திற்கு முந்தைய நாள் திவ்யா காதலனிடம் நல்லமுறையில் பேசியதாகவும் மறுநாள் இப்படி ஒரு பயங்கரம் நடந்து விட்டதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிந்தது.
தற்கொலை செய்து கொண்ட திவ்யா , வேலூர் மருத்துவக் கல்லூரியில் இளங்கலை கோல்ட் மெடலிஸ்ட் என்பதும் தெரியவந்துள்ளது
இது ஒருபுறம் இருக்க, 2 ஆம் ஆண்டு முதுகலைப்படிப்பில் தனது மகளுக்கு பணிச்சுமை அதிகம் இருந்ததாக பெற்றோர் தரப்பில் சொல்லப்படுகிறது. ஒருவேளை மரணத்திற்கு அதுவும் ஒரு காரணமா என்று விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து மாணவியின் செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி கடைசியாக மாணவியை தொடர்பு கொண்டது யார்? அவரது வீட்டிற்கு வந்தது யார்? என்பது குறித்தும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும் மாணவி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றதாக நண்பர்கள் தெரிவித்துள்ள நிலையில், அங்கு போலீசார் சோதனை செய்த போது கதவு உடைந்ததற்கான தடயம் இல்லாமல் இருந்திருக்கிறது. உடனே மாணவியின் நண்பர்களிடம் விசாரித்ததில் கதவை உடைக்க முற்பட்ட போது தாழ்பாள் திறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பதிவுகளை சேகரித்துள்ளனர்.
தொடர்ந்து காதல் விவகாரமா? பணிச்சுமையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல கோணங்களில் விசாரணை வேகமெடுத்து வருகிறது.
