இறுக்கமான ஆடை - மகனை அடித்ததாக ஆசிரியர்கள் மீது தாய் புகார்

x

தென்காசியில், இறுக்கமான ஆடைகள் அணிந்து வந்ததாகக் கூறி, பள்ளி மாணவனை ஆசிரியர்கள் அடித்ததாக எழுந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புளியங்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றும் அனுசுயா என்பவரின் மகன் அதே பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வருகிறார். அவரை, இறுக்கமான ஆடை அணிந்து வந்ததாக கூறி ஆசிரியர்கள் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனவேதனையடைந்த மாணவன் வீட்டில் இருந்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அவரது தாயார் அனுசுயா புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்