வாக்கிங் முடித்த கையோடு நேராக ஹாஸ்பிடலுக்கு விசிட் அடித்த அமைச்சர்

x

அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் திடீர் ஆய்வு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே, அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்ரமணியன், திடீர் ஆய்வு செய்தார்.

மேக்கரை அருகே அடவினார் கோவில் அணைப்பகுதியில் நடைபயிற்சியை முடித்துவிட்டு, வடகரையில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு செய்தார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகைப் பதிவேட்டை பார்வையிட்டார்.

பின்னர் ஆய்வகம், கட்டுப்போடும் இடம் உள்ளிட்ட அறைகளில் ஆய்வு செய்தபின், மக்களை தேடி மருத்துவம் குறித்து நோயாளிகளிடம் தொலைபேசி மூலம் அமைச்சர் விசாரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்