Cuddalore | தரதரவென இழுத்து செருப்பால் அடித்து செயினை தூக்கி சென்ற நபர்-தாங்க முடியாமல் கதறும் வீடியோ

x

மது வாங்குவதில் தகராறு - கொடூர தாக்குதல் - ஒருவர் கைது

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் டாஸ்மாக்கில் முதலில் யார் மது வாங்குவது என ஏற்பட்ட போட்டி, மோதலில் முடிந்தது. மனோஜ்குமார் என்பவரை 3 பேர் கொண்ட கும்பல், அவரது தலையில் மதுபாட்டிலால் கடுமையாக தாக்கியும், காலணியால் அடித்தும் துன்புறுத்தியதோடு, கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் மொபைல் போனை பறித்து சென்றது. இந்த வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், தாக்குதலில் தணிகாச்சலம், சக்தி, ரஞ்சித்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து, ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த தணிகாசலம் என்பவரை கைது செய்து, 5 பவுன் செயின், மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்