அரசு வழக்கறிஞரை வெட்டிக்கொலை செய்தவர் தற்கொலை

x

தென்காசியில் கடந்த 3 தேதி பட்டப் பகலில் வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை அலுவலகத்திற்குள் புகுந்து மர்ம நபர் சரமாரி வெட்டிக் கொலை செய்தார். சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து வந்து வெட்டுப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வழக்கறிஞரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலே இறந்ததாக தகவல் தெரிவித்தனர்

அதன் பின்னர் இவரை கொலை செய்தவர் கடையநல்லூர் அருகே ஊர் மேல் அழகியான் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமியின் எதிர் வீட்டு சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பது தெரிந்ததை தொடர்ந்து அவரை பிடிப்பதற்கு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் அவருடைய மனைவி உறவினர் இருவரையும் மதுரையில் வைத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் சுப்பிரமணியர் மட்டும் எங்கே சென்றார் என்பது தெரியாததால் அவர் கையில் செல்போன் கொண்டு செல்லாததால் அவரை பிடிப்பதில் போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது செலவு செய்வதற்கு சிவசுப்பிரமணியன் கையில் பணம் இல்லாததால் எப்படியாவது ஏடிஎம் மூலம் பணத்தை எடுப்பார் அதன் மூலம் அவருடைய இருப்பிடத்தை கண்டுபிடித்து விடலாம் என போலீசார் தீவிரமாக அவரை கண்காணித்தது மற்றும் அவருடைய உறவினர் யாருக்காவது தொலைபேசியில் பேசுவார் என கண்காணித்து வந்த நிலையில் கடந்த 4 தேதி நாமக்கல் அருகே ரயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ரயிலில் அடிபட்டு கண்டெடுக்கப்பட்டது.அதன் பின்னர் நாமக்கல் மருத்துவமனையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் என்ற அடிப்படையில் வைக்கப்பட்டது அதர் பின்னர் தனிப்படையினர் நாமக்கல் சென்று விசாரணை செய்ததில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் தென்காசியில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவாக இருந்த சிவசுப்பிரமணியம் தான் அவர் என்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்