தந்தையை கொலை செய்த நபர் - ஜாமினில் வெளியே வந்தபோது பழிதீர்த்த மகன்
திருப்பத்தூர் மாவட்டத்தில் சொத்து பிரச்சினையில் தனது தந்தையை கொலை செய்த நபரை, நண்பர்களுடன் சேர்ந்து மகன் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த திம்மராயன் என்பவருக்கும், இவருடைய அக்கா மகன் சக்கரவர்த்தி என்பவருக்கும், நிலப் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சக்கரவர்த்தி திம்மராயனை கடந்த பிப்ரவரி மாதம் வெட்டி கொலை செய்துவிட்டு சிறை சென்றார். இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த சக்கரவர்த்தி குடும்பத்தோடு பொன்னேரி பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்ற போது 5 பேர் வெட்டி கொலை செய்தனர்.
விசாரணையில் சக்கரவர்த்தியை கொலை செய்தது, திம்மராயனின் மகன் பாரத்தும், அவருடைய நண்பர்களும் என தெரிய வந்தது. இதனையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்
Next Story
