ஸ்தம்பித்த சென்னையின் முக்கிய சாலை.. சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள் - ஊர்ந்து சென்ற வாகனங்கள்

ஸ்தம்பித்த சென்னையின் முக்கிய சாலை.. சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள் - ஊர்ந்து சென்ற வாகனங்கள்
Published on

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்வதால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்தும், தமிழக அரசின் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் ஜிஎஸ்டி சாலை வழியாகவும், பைபாஸ் சாலை வழியாகவும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் ஒரே நேரத்தில் பெருங்களத்தூரை வந்தடைந்ததால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே வாகனங்கள் ஊர்ந்து சென்றன. தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து வண்டலூர் நோக்கி ஏராளமான பேருந்துகள் சென்றதால் ஜிஎஸ்டி சாலையில், இரவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் வாகன ஓட்டிகள், ஆமை வேகத்தில் நகர்ந்த வாகனங்களால் பாதிப்புக்குள்ளானார்கள்

X

Thanthi TV
www.thanthitv.com