"தமிழ் மக்களின் அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கிறது" - பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு

மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்
"தமிழ் மக்களின் அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கிறது" - பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு
Published on

மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளின் அன்பும், உபசரிப்பும் எப்போதும் போல் தனித்து நிற்பதாகவும், தமிழக மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும் என்றும் பிரதமர் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது முறை சாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நன்றி தெரிவித்து கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும் என்றும் , இந்திய மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும் என்றும் அப்பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com