ரீபெரும்புதூரை அதிர வைத்த ஒற்றை பெண்... பதற வைத்த வீடியோ... முன்னாள் அதிகாரி மகள் அதிர்ச்சி பேட்டி

x

ஸ்ரீபெரும்புதூரில், வீட்டை அபகரிக்கும் நோக்கில் பூட்டை உடைத்து நுழைய முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஆதனூரை சேர்ந்த முன்னாள் வட்டார சுகாதார ஆய்வாளர் வனத்தையன், மேட்ரிமனி மூலமாக, நீலகிரியை சேர்ந்த மடோனா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு வனத்தையன் இறந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய மடோனா, தற்போது வீட்டை அபகரிக்கும் நோக்கில், ஆட்களுடன் வந்து பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயன்றுள்ளார். இதுகுறித்து வனத்தையனின் மகள் சிசிலியா அளித்த புகார் அடிப்படையில், மடோனாவை போலீசார் கைது செய்து, புழல் செய்து சிறையில் அடைத்தனர்.

மடோனா ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்து மோசடி செய்த‌தாகவும், தனது தந்தையையும் பணத்திற்காக ஏமாற்றி திருமணம் செய்த‌தாகவும் வனத்தையனின் மகள் சிசிலியா குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்