`அம்மன்’ சொரூபமாக வந்த சிறுமி - ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அபூர்வம்
வருடம் ஒருமுறை மட்டுமே மடிசார் புடவையில் காட்சி அளிக்கும் அகிலாண்டேஷ்வரி அம்மன்
திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் கோவிலிலிள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன், வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மடிசார் புடவையில் காட்சி தருவதால், ஏராளமான பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். ஆடித் திருவிழாவின் 10-ம் நாள் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அகிலாண்டேஸ்வரி அம்மன் காலையில் மகாலட்சுமியாகவும், மதியத்தில் துர்க்கையாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் காட்சியளிப்பதாக ஐதீகம் உள்ளது. இந்நிலையில் ஆடிப்பூரத்தன்று மூலவர் மற்றும் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாக, மடிசார் புடவை அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. வருடம் ஒருமுறை மட்டுமே மடிசார் புடவையில் காட்சி அளிப்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குறிப்பாக பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
