பறிபோன ராணுவ வீரர் உயிர்..ஊரே ஒன்று கூடி செய்த அந்த விஷயம்..காண்போரை கண்கலங்க வைத்த சம்பவம்..
பணியின் போது உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் உடலுக்கு, சொந்த ஊரான கடலூரில் ஊர் மக்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். கடந்த 14 வருடங்களாக ராணுவத்தில் பணியாற்றி வந்த கண்டமங்களத்தை சேர்ந்த பிரகாஷ், மீரட்டில் பணியின் போது உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ராணுவ மரியாதைக்கு பின் பிரகாஷின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், ஊர் மக்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பிரகாஷின் மனைவி, அவரது 2 வயது குழந்தையிடம் அப்பாவை கூப்பிடு என உடலை காட்டி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் பிரகாஷின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
