Erode | lepord | நீண்டநாள் பீதியை கிளப்பிய சிறுத்தை.. கூண்டு வைத்து மடக்கி பிடித்த வனத்துறை
Erode | lepord | நீண்டநாள் பீதியை கிளப்பிய சிறுத்தை.. கூண்டு வைத்து மடக்கி பிடித்த வனத்துறை #lepord # Erode #tnforestguard #thanthitv ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயிகளை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. டி.என்.பாளையம் வனச்சரகம் கடம்பூர் வனப்பிரிவுக்குட்பட்ட விளாங்கோம்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியுள்ளது. இதையடுத்து கால்நடை மருத்துவர் கொண்டு சிறுத்தையின் உடல் நிலையை பரிசோதித்ததில் சிறுத்தையின் பின்பகுதியில் காயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிகிச்சை முடிந்து உடல்நிலை தேறியவுடன் சிறுத்தை வனப்பகுதிக்குள் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
