வாதாட மறுத்த வக்கீல் - அரிவாளால் பேசிய கானா முருகன்
வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், தனது வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய, சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மது விற்பனை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கானா முருகன் என்பவருக்காக கண்ணாதாசன் என்ற வழக்கறிஞர் பலமுறை நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். இந்நிலையில், கானா முருகன் சரித்திர பதிவேடு குற்றவாளியான நிலையில், அவருக்காக வாதாட கண்ணதாசன் மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கண்ணாதாசனின் அலுவலகத்திற்கு சென்ற கானா முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டியுள்ளார். இதையடுத்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற கானா முருகனை, போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
Next Story
