வந்தது தென்மேற்கு பருவமழை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது நாடு முழுவதிலும் ஜூலை முதல் வாரத்தில் முழுமையாக பரவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலமாக உள்ளது. நாட்டின் 80 சதவீத மழை பொழிவு தென்மேற்கு பருவமழை காலத்தில் கிடைப்பதாக கூறப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால் நாடு முழுவதும் படிப்படியாக கோடை வெப்பதின் தாக்கம் குறைய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
