கோவையை அதிரவைத்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த சம்பவம்... இறங்கிய அதிகாரிகள்...அடுத்தடுத்து அதிரடி ஆக்ஷன்
கோவையை அதிரவைத்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த சம்பவம்... இறங்கிய அதிகாரிகள்...அடுத்தடுத்து அதிரடி ஆக்ஷன்
கோவை மாவட்டம் பொள்ளாச்சில இருக்கர ஒரு தனியார் பள்ளியில எட்டாம் வகுப்பு படிக்கர மாணவிய பள்ளி நிர்வாகம் பூப்பெய்திய காரணத்துனால பள்ளி வகுப்பறையோட படியில அமரவெச்சு தேர்வு எழுதவெச்ச விவகாரம் அதிர்ச்சிய ஏற்படுத்தியிருக்கு.
மாணவி பூப்பெய்தியதால அந்தப் பள்ளி நிர்வாகத்துக்கிட்ட அந்த மாணவியோட தாயார் மாணவிய தனியா அமரவெச்சு தேர்வு எழுதரதுக்கு அனுமதிக்கனும்னு கேட்டிருக்காங்க. இதனால கடந்த ஏழாம் தேதி அந்த மாணவி பள்ளிக்கு வெளியே படிக்கட்டில உட்கார்ந்து தேர்வு எழுதியிருக்காங்க. அன்னைக்கு மாணவிக்கு கொஞ்சம் உடல்நல கோளாறும் ஏற்பட்டிருக்கு. இதை மாணவி பெற்றோர்கிட்ட சொல்லியிருக்காங்க. இந்த நிலையில 9ஆம் தேதி தேர்வு எழுத மாணவி போனப்ப மாணவியோட தாயாரும் கூட போயிருக்காங்க.
