அப்பாவின் உடல் முன்பு நடைபெற்ற மகன் திருமணம்
கடலூரில் தந்தை உயிரிழந்த நிலையில், அவரது உடல் முன்பாக மகன் திருமணம் செய்து கொண்டு ஆசிர்வாதம் பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கவனை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். வயது மூப்பின் காரணமாக செல்வராஜ் காலமான நிலையில், அவரது உடல் முன்பாகவே, இளைய மகன் அப்பு, விஜயசாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து, ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். துக்க நிகழ்வு வீட்டில் திருமண செய்து புது வாழ்வை தொடங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Next Story
