மனைவியுடன் சேர்ந்து வாழ ஏங்கிய கணவன்.. மாமியார் கதையை முடித்த கிளைமாக்ஸ்

x

தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியில் மாமியாரை, மருமகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த கொடிஅரசன் - பூங்கொடி தம்பதியினர், நித்யா என்ற தங்களது மகளை சுருளி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இதில் சமீப நாட்களாக, நித்யாவிற்கும், அவரது கணவர் சுருளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், நித்யா கோபித்துக் கொண்டு தனது தாயின் வீட்டுக்கு வந்த நிலையில், அவரது கணவர் சுருளி பலமுறை மனைவியை சமாதானம் பேசி அழைத்து பார்த்துள்ளார். ஆனால், அவர் கணவருடன் செல்ல மறுத்த நிலையில், ஆத்திரத்தில் இருந்த சுருளி மனைவியை தேடி மாமியாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த தனது மாமியார் பூங்கொடி உடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின் வாக்குவாதம் முற்றிய நிலையில் பூங்கொடியை, கத்தியால் குத்தி விட்டு சுருளி தப்பியோடினார். தொடர்ந்து, மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கூடலூர் தெற்கு காவல்நிலைய போலீசார் தலைமறைவான நித்யாவின் கணவர் சுருளியை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்