இசைக்கலைஞரின் வீடு எரிந்து முற்றிலுமாக உருக்குலைந்த கொடூரம்

x

சேலம் பகுதியில் இசைக்கலைஞர் ஒருவரது வீடு மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மரவனேரி பகுதியை சேர்ந்தவர்கள் முருகன், பட்டு தம்பதி. முருகன் இசை கலைஞராக உள்ள நிலையில், பட்டு கிடைத்த வேலைகளை செய்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் வீட்டில் இல்லாத நிலையில், திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். வீட்டின் உள்ளே கியாஸ் சிலிண்டர் இருந்த நிலையில், நல் வாய்ப்பாக அசாம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக அது மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த டிவி, உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள், இசை பொருட்கள் எரிந்து சாம்பலாகின.


Next Story

மேலும் செய்திகள்