வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் - ஓட ஓட வெட்டிக் கொன்ற பயங்கரம்
"வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் - ஓட ஓட வெட்டிக் கொன்ற பயங்கரம்
சிவகங்கை அருகே இளைஞரை ஒரு கும்பல் ஓட ஓட வெட்டிக்கொன்ற சம்பவத்தில் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமறாக்கி கிராமத்தை சேர்ந்த மனோஜ்பிரபு என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
தனது நண்பர்கள் ஹரிஹரன், அஜித்குமார் உடன் மேலூரில் நடந்த கலைநிகழ்ச்சியை பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பும்போது, புதுப்பட்டி அருகே பைக் மீது ஒரு கார் மோதியதாக கூறப்படுகிறது.
அப்போது காரில் இருந்த கும்பல் தன்னை தாக்க வருவதை பார்த்த மனோஜ்பிரபு தப்பியோட முயன்றதாகவும், எனினும் அந்த கும்பல் மனோஜை ஓட ஓட சரமாரியாக வெட்டிக் கொன்றதாகவும், அவரது நண்பர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து 2 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மனோஜ் பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சூழலில், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது