தமிழகத்தை உலுக்கிய ஆணவக்கொலை - கேமரா முன்பு முகத்தை மூடி அழுத சுர்ஜித்..

x

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் கொல்லப்பட்ட வழக்கில் கைதான சுர்ஜித் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், கேமரா முன்பு முகத்தை மூடி அழுதபடியும், பின்பு கம்பீரமான தொனியில் நடந்து சென்றதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சிபிசிஐடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். முன்னதாக, காவல்துறையின் வாகனத்தில் இருந்து இறங்கியதும் கேமரா முன்பு முகத்தை மூடிக்கொண்டு அழுதபடி சென்ற சுர்ஜித், பின்பு இயல்பாக நடந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்