ஓடும் ரயிலில் அழகிய குழந்தை பெற்றெடுத்த பெண் : துரிதமாக செயல்பட்ட ரயில்வே காவலர்களுக்கு பாராட்டு

எழும்பூர் ரயில் நிலையம் வந்த விரைவு ரயிலில் நிறைமாத கர்ப்பிணி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
ஓடும் ரயிலில் அழகிய குழந்தை பெற்றெடுத்த பெண் : துரிதமாக செயல்பட்ட ரயில்வே காவலர்களுக்கு பாராட்டு
Published on
அவுரா விரைவு ரயிலில் பயணித்த நெல்லையை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஸ்வர்ணலதா ஓடும் ரயிலில் பிரசவ வலியால் துடித்தார். இது குறித்து 108 அவசர உதவி எண் மற்றும் தனியார் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைவு ரயில் எழும்பூர் வந்ததும், அங்கு தயாராக இருந்த மருத்துவ குழு ஸ்வர்ண லதாவுக்கு ரயில் பெட்டியிலேயே பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் அந்த பெண், அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனை தொடர்ந்து தாயும் சேயும் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com