ஆத்தி என்ன குளிரு.. காஷ்மீர் போல் மாறிய மலைகளின் இளவரசி - ரசிக்க வைக்கும் அழகிய காட்சி

x

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் உறை பனிக்காலம் துவங்கியுள்ளது.

குளுகுளு கொடைக்கானல் உறைபனிக் காலம் தொடங்கியதால் மேலும் குளிரால் நடுங்குகிறது.

புல்வெளிகள் வெண் போர்வை போர்த்தியது போல் ரம்மியமாக காட்சியளிக்கின்றன..

பகலில் வெயிலும், இரவில் கடும் உறை பனியும் நிலவி வருவதால் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்வோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது.

நீர்பிடிப்பு பகுதிகள், புல்வெளிகளில் உறை பனி வெள்ளைக் கம்பளம் விரித்தது போல கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சியை சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினர்..

மேலும் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்