Samiyadi Issue | குறி சொன்ன சாமியாடி - 150 குடும்பங்களுக்கு நேர்ந்த கதி
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சாமியாடியை பயன்படுத்தி, ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பரியா மருதுபட்டியில் கோயில் திருவிழாவின்போது, தனி நபரின் சுயநலத்திற்காக சாமியாடியை பயன்படுத்தி குறி சொல்வதுபோல் 150 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. 2 ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்காமல் இருப்பதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர், சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சனையை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
Next Story
