தச்சங்குறிச்சியில் 2026ன் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது
தச்சங்குறிச்சியில் 2026ன் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் போட்டியை தொடங்கி வைத்தனர். தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் 900 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.7 சுற்றுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது
2026ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த காட்சிகளை பார்க்கலாம்...
முன்னதாக தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 900 காளைகள் கலந்து கொண்டுள்ளன.காளைகளை அடக்குவதற்காக 300 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.7 சுற்றுக்களாக இந்த போட்டியானது நடைபெறுகிறது.
Next Story
