வீட்டு சுவரில் "இந்த வீடு விற்பனைக்கு.." என எழுதி வைத்த நிதி நிறுவனம் - உரிமையாளர் எடுத்த முடிவு
பொள்ளாச்சி அருகே கல் உடைக்கும் தொழிலாளர் வீட்டு சுவரின் மீது தனியார் நிதி நிறுவன அதிகாரிகள், வீடு விற்பனைக்கு என்று எழுதி தொங்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மேகவுண்டனூரை சேர்ந்த வேலுமணி என்பவர் தனியார் நிறுவனத்தில் 5.2 லட்சம் ரூபாய் கடன் பெற்று 2 லட்சம் ரூபாய் வரை கட்டியதாக தெரிகிறது. பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தவணையை செலுத்த முடியாத வேலுமணியை நிதி நிறுவன ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட குடும்பம் புகார் அளித்துள்ளனர்.
Next Story
