``கர்ப்பிணி வயிற்றிலேயே இறந்த சிசு; அகற்றாமல் மருத்துவர்கள் அலட்சியம்..'' - உறவினர்கள் புகார்

x

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு குழந்தை வயிற்றிலேயே இறந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்து அகற்றாமல் மருத்துவர்கள் அலட்சியத்துடன் நடந்து கொள்வதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த ரகுபதி என்பவரின் மனைவி கோகுலப்பிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து குழந்தையை வயிற்றில் இருந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், மருத்துவமனை வளாகத்திலேயே காத்துக் கிடப்பதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்த நிலையில், மகப்பேறு மருத்துவ பிரிவிற்கு உள்ளே பெண்ணை அனுமதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்