உறையவைக்கும் நீரில் நீந்தி - மிரள வைத்த வீராங்கனை
சிலி நாட்டில், ஐஸ் மெர்மெய்ட் என அழைக்கப்படும் பிரபல நீச்சல் வீராங்கனை பார்பரா ஹெர்னாண்டஸ் Barbara Hernandez, நீண்ட தூரம் குளிர்ந்த நீரில் நீந்தி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அண்டார்டிக் மற்றும் பிற உறைபனி நீர்ப்பரப்புகளில் வெட்சூட் அணியாமல் நீந்தி பார்பரா ஹெர்னாண்டஸ் ஏற்கனவே சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், பியூர்ட்டோ நடால்ஸில் Puerto Natales உள்ள செனோரெட் கால்வாயில், நான்கு புள்ளி 5 டிகிரி செல்சியஸ் உறைபனி நீரில் நீந்தியுள்ளார்.
வெட்சூட் இன்றி, சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தை, ஒரு மணி நேரம் 6 நிமிடங்களில் நீந்தி தனது முந்தையை சாதனையை பார்பரா ஹெர்னாண்டஸ் முறியடித்துள்ளார்.
Next Story
