Erode | Crime | Grindr App-ஆல் வந்த வினை - இளைஞருக்கு நேர்ந்த கதி.. ஈரோட்டில் அதிர்ச்சி

Grindr App மூலம் பழகிய நண்பர்களால் இளைஞர் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

#Erode | #GrindrApp | #Grindr | #TNPolice | #ThanthiTV Erode | Crime | Grindr App-ஆல் வந்த வினை - இளைஞருக்கு நேர்ந்த கதி.. ஈரோட்டில் அதிர்ச்சி ஈரோட்டில் Grindr App மூலம் பழகி இளைஞரை தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். நஞ்சை ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த கோபிநாத், ஈரோடு தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், பச்சப்பாளி அருகே மூவர் கத்தியால் தாக்கி செல்போன் மற்றும் ஜி-பே மூலம் 2,500 ரூபாய் பறித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜெகன், கவுதம், கதிர்வேல் ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜெகன் மற்றும் கோபிநாத் இருவருக்கும் Grindr App மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன் மூலம் கோபிநாத்தை வரைவழைத்த ஜெகன், மறைந்திருந்த தனது நண்பர்களான கவுதம் மற்றும் கதிர்வேல் ஆகியோருடன் சேர்ந்து கோபிநாத்தை தாக்கி பணம், செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com