``புகழ்பெற்ற கோயிலையே காணவில்லை.. எங்கே போனார் முருகன்?’’ - திடீர் பரபரப்பு புகார்
திண்டுக்கல்லில் கோயிலை காணவில்லை என்று இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல் பழமை மிகுந்த காளகஸ்திவரர் அபிராமி அம்மன் கோயில் திருப்பணிக்கு தலைவராக இருந்த வேலுச்சாமி உள்ளிட்ட நான்கு பேர் கோயிலை ஒட்டுமொத்தமாக திருடிவிட்டார்கள் என புகார் அளித்துள்ளார். கோயிலில் இருந்த சுமார் 70 தூண்கள் மயில் மண்டபம், பழமையான சிலைகள் ஆகியவற்றை காணவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும், கோயிலில் இருந்த முருகனின் சன்னதியையும் காணவில்லை என அவர் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story