குடும்பத்தோடு சென்றவர்களை இடித்து தள்ளி - நிற்காமல் சென்ற காரை மடக்கிய மக்கள்-ஓட்டுநருக்கு தர்ம அடி

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேருந்து நிலையம் அருகே தாறுமாறாக ஓடிய கார் ஒன்று, இரு சக்கர வாகனத்தில் குழந்தையுடன் சென்றவர்களை இடித்து தள்ளி விட்டு நிற்காமல் சென்றது. இதனை கண்ட பொது மக்கள், விபத்து ஏற்படுத்தி விட்டு அதிவேகமாக சென்ற காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த 4 பேரும் மது போதையில் இருந்தது தெரியவர, அடித்து துவைத்த பொதுமக்கள், அவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் விபத்து ஏற்படுத்திய 4 பேரும் சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com